நீங்க அதிகம் மாம்பழம் சாப்பிடறவங்களா? அப்போ இனிமேல் இப்படி சாப்பிடாதீங்க !

 



கோடைகாலம் என்றால், நமக்கு உடனே முதலில் நினைவுக்கு வருவது அனல் பறக்கும் வெயில் மற்றும் மாம்பழம் தான். மாம்பழம் பிடிக்காதவர்கள் என இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. இந்த மாம்பலமானது பொதுவாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழம். இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 


 இந்தியாவில் அதிலும் குறிப்பாக நம் தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் அதிகபடியான அளவில் மாபழம் விளைவிக்க படுகின்றன. அதிலும் குறிப்பாக நம் சேலம் மாவட்டம் மாம்பழத்திற்கு பேர்போன ஒரு மாவட்டம் என்றும் இந்த சேலம் மாவட்டத்தை மாங்கனி மாவட்டம் என்றும் அனைவராலும் அழைக்க படுகிறது. 


 அதிலும், மல்கோவா மாம்பழம், இமாம் பசந்த் போன்ற மாம்பழங்களின் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மாம்பழங்கள்  பழமாக சாப்பிடுவதோடு, குளிர் பானங்களாகவும்,  மில்க் ஷேக் ஜூஸ் என பிற வழிகளிலும் சாப்பிடும் பழக்கம் உள்ளது.


மாம்பழம் சாப்பிடுவதால் பல்வேறு வகையான ஆரோக்கியம் நிறைந்த நன்மைகள் உள்ளன. ஆனால் நாம் மாம்பழத்தை சாப்பிட்ட உடனே சில உணவுப் பொருட்களை சாப்பிடுவதால், அல்லது சில உணவுப் பொருட்களை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடுவதால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.



நாம் மாம்பழத்தை சாப்பிடும் பொழுது இந்த நான்கு பொருட்களை, மாம்பழத்துடன் சேர்த்தோ அல்லது மாம்பழம் சாப்பிட்ட பிறகோ கட்டாயம் சாப்பிட கூடாது. அந்த நான்கு பொருட்கள் என்னவென்று  ஒவ்வொன்றாக நாம் கீழே பார்க்கலாம்.


நீர்:

           மாம்பழம் சாப்பிட்ட பிறகு உடனேயே தண்ணீரை அருந்துவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாம்பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரைப் குடித்தால் எதிர்மறையான சில தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, அமிலத்தன்மை ஆகியவை ஏற்படலாம். மாம்பழம் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு தான் நீங்கள் தண்ணீரை குடிக்க வேண்டும்.


தயிர்:

                    ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் நறுக்கிய மாம்பழம் இரண்டையும் கலந்து சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு உள்ளது. இருப்பினும்,  சூட்டை தரும் மாம்பழத்துடன், குளிர்ச்சியை ஏற்படும் தயிரை உட்கொள்வதால், தோல் பிரச்சினைகள், உடலில் நச்சுகள் சேருதல், ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் இதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.


கசப்பு:

                     மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும். ஒரு வேலை தவிர்க்கா விட்டால், கசப்பான உணவுகளை சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.


காரமான உணவு:

                                                        மாம்பழம் சாப்பிட்ட பிறகு உடனே காரமான உணவு அல்லது மிளகாய் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் உங்கள் சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது முகத்தில் முகப்பரு உண்டாகவும் வழிவகுக்கும்.


இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க மற்றும் ஷேர் பண்ணுங்க. மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த "டுடே டிப்ஸ் அண்டு ட்ரிக்ஸ்" என்ற தளத்துடன் இணைந்திருங்கள்.

Post a Comment

0 Comments